புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்? அப்டேட் கொடுத்த ரயில்வே அதிகாரி!

புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்: தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முதலில் தேர்வு செய்வது ரயில் பயணத்தை தான்.

குறிப்பாக ராமேஸ்வரம் செல்ல நினைக்கும் மக்கள் ரயிலில் செல்லவே ஆசைப்படுவார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பன் பாலம் தான்.

அந்த பாலத்தில் ரயில் செல்லும் பொழுது இரு பக்கமும் கடல் தண்ணீர் இருப்பதை பார்த்து மக்கள் வியப்படைவார்கள். அதற்காகவே ரயிலில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாம்பன் பாலத்தில் ரயில் செல்லவில்லை. ஏனென்றால் ரயில் பாலம் பழுது அடைந்து விட்டதால், ரயில்வே நிர்வாகம் ரூ.550 கோடி செலவில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு பாலம் அமைத்து வருகின்றனர்.

பழைய பாலத்தில்  தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட மாதிரி புதிய தூக்கு பாலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதால், நவீன வசதிகளுடன் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு நடுவில் கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்ப செங்குத்து பாலத்துடன் புதிய பாலத்தை வடிவமைத்துள்ளனர்.

குறிப்பாக அந்த செங்குத்து பாலம் லிப்ட்(LIFT) போல் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீ உயரத்திற்கு மேல் நோக்கி செல்லும் என்று கூறப்படுகிறது.

Also Read: LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

இந்நிலையில் பாம்பன் பாலம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாம்பன் புதிய பாலத்தின் பணிகள்( 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு) 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனவே விரைவில் முழு பணிகளும் முடிந்து ரயில் சேவையை புதிய பாலத்தில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.         

Leave a Comment