தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன் – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

குஜராத் மாநிலத்தில் பெற்ற தாயை கொன்றுவிட்டு இரங்கல் செய்தி பதிவிட்ட மகன், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனே நிலேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜ்கோட் பகுதியில் தனது தாயை மகன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நிலேஷ் என்ற இளைஞர் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, மேலும் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

அதில் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, நான் உங்களை கொன்று விட்டேன், மிஸ் யூ என்றும் நிலேஷ் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வரைந்த காவல்துறை நிலேஷை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்த தாய் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தைக்கும் அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை – உச்சநீதிமன்றம் அதிரடி – எலான் மஸ்க் கடும் கண்டனம்!

இந்நிலையில் பெற்ற தாயை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment