கொலை மிரட்டல்..,தனுஷ் பட நடிகை மீது பரபரப்பு புகார்?.., இவரா இப்படி?
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரண்யா பொன்வண்ணன்
தமிழ் சினிமாவில் விஜய்யை தவிர்த்து எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வகித்து வருகிறார். அவரின் வீட்டு பக்கத்தில் உள்ள வீட்டில் ஸ்ரீதேவி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் தகராறு வந்து கொண்டே இருந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ஸ்ரீதேவி வீட்டில் 20 அடி நீள இரும்பு கேட் இருக்கிறது. அந்த கேட்டை திறக்கும் போது, சரண்யாவின் கார் மீது உரசுவது போல வேகமாக நகர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஸ்ரீதேவி வீட்டுக்குள் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே இது குறித்து ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், சரண்யா குடும்பத்தினர் தங்களை மிரட்டிய சிசிடிவி காட்சிகளுடன் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.