பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் - முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் - முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !

பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல். கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மேலும் இவர் தொடர்பான சுமார் 3 ஆயிரம் பாலியல் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் குற்றசாட்டு தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உடனடியாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.

அந்த வகையில் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக சீண்டிய விவகாரத்தில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணாவிற்கும் தொடர்பிருக்கிறது எனக் குற்றம்சாட்டப்பட்டது.

எனவே இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டன. பிறகு ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் பிரஜ்வாலிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பி சென்று தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் பிரஜ்வாலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவரும், பிரஜ்வாலின் தாத்தாவுமான ஹெச்.டி.தேவகவுடா கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த கடிதத்தில் எங்கிருந்தாலும் உடனடியாக போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் – தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கருத்து !

அந்த வகையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பி வரும் 31ஆம் தேதி கர்நாடகா சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராக இருக்கிறேன். அத்துடன் இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க உள்ளேன்.

கர்நாடகா மாநில மக்கள் மற்றும் தேவகவுடா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *