தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருகிறேன்?.., பரபரப்பு பேட்டி கொடுத்த நடிகர் பிரசாந்த்.., ஒரு வேலை இருக்குமோ?
தளபதி விஜய் – பிரசாந்த்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது குறித்து பல பிரபலங்களும் வாழ்த்துக்களுடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரசாந்த் விஜய் அரசியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ” தளபதி விஜய் எப்பொழுது மக்களுக்கு நல்ல செய்ய நினைப்பவர். அவர் அரசியலுக்கு வந்தது விஷயம் தான். அவருக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள். மேலும், அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம் தேர்ந்தெடுப்பது மக்கள் தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவரிடம், விஜய் உங்களை அழைத்தால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா..? என்ற கேள்விக்கு, அது காலத்தின் கையில் தான் இருக்கிறது. தற்போது நடிகர் தான் என்று தெரிவித்தார்.