தனியார் விமான ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…, சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு.., பயணிகள் அவதி!!
விமான ஊழியர்கள் போராட்டம்
பொதுவாக குறைந்த நேரத்தில் தாம் நினைத்த இடத்தை சென்று அடைவதற்கு பெரும்பாலான மக்கள் விமான பயணத்தையே விரும்புகின்றனர். அதன்படி இந்த சேவையை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சிறப்பாக செயலாற்றி வரும் நிறுவனம் தான் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவிய நிலையில் மற்ற நாடுகளுக்கு செல்ல தடை விதித்ததால் விமானங்கள் இயங்கவில்லை. இதனால் விமான நிலையத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு அப்போது சம்பளம் உயர்வு கொடுக்காமல் இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய போதும், சம்பள உயர்வு கொடுக்கப்படாததால், லுப்தான்சா நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டக் கொடி தூக்கியுள்ளனர். இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையம் செல்லும் லுப்தான்சா விமானத்தை இயக்காமல் இருந்து வந்ததால் பயணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டனர். மேலும் ஏற்கனவே இதே போல் ஒரு முறை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.