புனித தேவ சகாயம் பிள்ளைபுனித தேவ சகாயம் பிள்ளை

தமிழகத்தின் முதல் புனிதராக இருப்பவர் புனித தேவ சகாயம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைசாட்சியாக இறந்தார் தேவசகாயம். இவருக்கு கடந்த ஆண்டு மே 15ம் தேதியில் வாடிகன் நகரில் வைத்து புனிதர் பட்டம் போப்பாண்டவரால் வழங்கப்பட்டது. இந்து குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் இவர் பட்ட பாடுகளின் நிமித்தம் தற்போது புனிதராக இருக்கின்றார்.

புனித தேவ சகாயம் பிள்ளை ! தமிழகத்தின் முதல் புனிதர் ! 

புனித தேவ சகாயம் பிள்ளை

யார் இவர் ? :

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நட்டலாம் என்னும் சிறிய கிராமத்தில் 23 ஏப்ரல் 1712ம் ஆண்டு நாயர் குலத்தில் பிறந்தார். நீலகண்டன் என்பதே இவரின் இயற்பெயர். இவரின் சிறு வயதிலேயே சமஸ்கிருதம் , கலைகள் முதலியவற்றை கற்றவர். இவரின் இளமை பருவத்தில் வில் வித்தை , ஆயக் கலைகள் , போர் ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை அறிந்து கொண்டார். 

JOIN WHATSAPP GROUP

திருமணம் :

மார்த்தாண்டம் வர்மாவின் அரண்மனையில் பத்மநாபுரம் கோட்டையில் கருவூல அதிகாரியாக பணி செய்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குஞ்சு வீட்டு நாயர் சமூகத்தை சேர்ந்த பார்கவி அம்மாள் என்னும் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இவரின் குடும்பத்தில் இருந்த பொருளாதார கஷ்டங்கள் நிலகண்டனை பெரிதும் பாதிப்படைய செய்தது. 

கஷ்டத்தில் நீலகண்டன் :

1741ம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் படைகள் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்ற வந்த போது மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்படுகின்றார். பின்னர் பெனடிக் அவர்கள் மார்த்தாண்ட வர்மாவின் படையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நீலகண்டனும் பெனடிக்கும் நண்பர்களாக மாறிவிட்டனர். நீலகண்டன் கவலையில் இருப்பதை கண்ட பெனடிக் கவலைக்கான காரணத்தினை நீலகண்டனிடம் கேட்டார். தன் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் இறந்து விடுகின்றது , வயலில் விளையும் பயிர்கள் நாசம் ஆகின்றது இதன் காரணமாக வீட்டில் பொருளாதார கஷ்டம் இருந்து வருகின்றது என்று பெனடிக்கிடம் கூறினார் நீலகண்டன்.

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் ! 

மனமாற்றம் :

பெனடிக் திருவிவிலியத்தில் யோபு கதையை சொல்லி நீலகண்டனுக்கு கிறிஸ்தவ மதத்தை அறிமுகம் செய்து வைக்கின்றார். பின்னர் இயேசுவை பற்றி அதிகம் அறிந்து கொண்டு திருநெல்வேலி கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்து திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவன் ஆகின்றார் நீலகண்டன். இவருக்கு நீலகண்டன் என்னும் பெயருக்கு பதில் லாசர் என்னும் தமிழ் பெயரான தேவசகாயம் என்ற பெயரினை சுட்டுகின்றார். இவரின் மனைவி பார்கவி அம்மாள் ” ஞானப்பூ ” என்ற கிறிஸ்தவ பெயருடன் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுகின்றார். அதன் பின்னர் பலருக்கு கிறிஸ்தவ மதத்தினை பற்றி போதனை செய்து வருகின்றார்.

சூழ்ச்சியில் சிக்கும் தேவசகாயம் :

உயர் வகுப்பினை சேர்ந்த இந்துக்கள் கிறிஸ்தவ மதத்தினை ஏற்கக் கூடாது என்று திருவாங்கூர் அரசு கட்டளையை சுட்டிக்காட்டி தேவசகாயத்தினை கிறிஸ்தவ மதத்தை ஏற்கக்கூடாது என்று உயர் அரசு அதிகாரிகள் வற்புறுத்தினர். நீலகண்டன் மதம் மாறிய செய்தி மன்னருக்கு தெரிய வந்தது. நீலகண்டன் சமூகத்தில் உயர் வகுப்பை சேர்ந்தவர். மேலும் அரசு அதிகாரியாகவும் இருந்து வருகின்றார். இவர் கிறிஸ்தவ மாதத்திற்கு மாறியது மன்னருக்கு பிடிக்க வில்லை. தேவசகாயத்தை அழைத்து முழு மனதோடு மதம் மறுமாறு மன்னர் கூறுகின்றார். ஆனால்  தேவசகாயம் மன்னரின் அழைப்பை ஏற்கவில்லை. 

JOIN SKSPREAD FACEBOOK PAGE

சிறையில் தேவசகாயம் :

சிறை தண்டனை அளித்தால் தேவசகாயம் என்னும் நீலகண்டன் மீண்டும் இந்து மதத்திற்கு மாறி விடுவான் என்று எண்ணி தேவசகாயத்தை சிறையில் அடைக்க உத்தரவு எடுக்கின்றார் மன்னர். பல மாதங்கள் சிறையில் இருந்தும் இந்து மதத்திற்கு மாறாமல் கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கையாய் இருந்தார் தேவசகாயம். இதனால் மன்னர் தேவசகாயத்தின் மீது கோபம் கொண்டு மன்னருக்கு கீழ்ப்படியாமல் இருந்து அரச துரோகம் செய்ததின் காரணமாக தேவசகாயத்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தேவசகாயம் பெற்ற தண்டனைகள் :

1 உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்படுகின்றது.

2. கைகள் பின்புறமாக கட்டப்படுவது.

3. எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்புறமாக அமர வைத்து பல ஊர்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றார்.

தண்டனையின் போது நிகழ்ந்த அற்புதம் :

எருமை மாட்டின் மீது அமர வைத்து அழைத்து செல்லும் போது தேவசகாயத்திடம் ஆசி பெற்ற கிறிஸ்தவ மக்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது. இவரை கைது செய்து பட்டுப்போன வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பட்டுப்போன வேப்பமரம் துளிர்த்து வளர்ந்துள்ளது. இவரின் புகழ் மக்கள் மத்தியில் வேகமாக பரவ ஆரம்பித்ததால் ரகசிய கொலை செய்ய திட்டம் திட்டப்படுகின்றது. 

இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் ! முதல் இடத்தில் உங்க பெயர் இருக்க வாய்ப்பு இருக்கு !

தேவசகாயம் கொலை செய்யப்படுதல் :

ரகசிய கொலை செய்வதர்க்கான அனுமதி மன்னரிடம் இருந்து வந்த உடன் மக்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளையில் தேவசகாயம் கொலை செய்யப்படுகின்றார். 1752ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் சுட்டுக்கொலை செய்யப்படுகின்றார். கொலை செய்து தேவசகாயம் உடலை காட்டில் தீ வைத்து எரித்து விட்டு மன்னரின் வீர்ர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தேவசகாயம் இறந்த இடம் ஆரல் குருசடி என்றும் தேவசகாயம் மவுண்ட் என்றும் இன்றளவில் அழைக்கப்படுகின்றது.

மறைசாட்சி தேவசகாயம் :

சில நாட்களுக்கு பின் தேவசகாயம் மன்னரால் கொலை செய்யப்பட்டதை அறிந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் காட்டில் இருந்த உடலை நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்து கல்லறை அமைக்கப்பட்டது. மறைசாட்சியாக மரித்த தேவசகாயம் கல்லறையில் செபித்த மக்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருச்சபையிடம் அறிவித்தனர். 

புனிதர் பட்டம் :

மறை சாட்சி தேவாசகம் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்க 2004ம் ஆண்டு தமிழக கத்தோலிக்க ஆயர் போரவை இணைந்து தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க கோரிக்கை விடுத்து இருந்தனர். 2004ம் ஆண்டுகளில் இறை ஊழியர் என்று கத்தோலிக்க தலைமையின் சார்பில் அழைக்கப்பட்டார். 2012 டிசம்பர் மாதம் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருளாளர் பட்டம் வழங்கியது. கடந்த 2022 கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சு அவர்களால் மே 15ம் தேதியில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கினார்.  

புனித தேவசகாயம் :

இந்தியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களின் பாதுகாவலாளர் புனித தேவசகாயத்தை கத்தோலிக்க திருச்சபை நிலை நிறுத்தி உள்ளது. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *