வேட்டையன் படத்தின் “மனசிலாயோ” பாடல் ரிலீஸ் – துள்ளலான இசைக்கு ஆட்டம் போட்ட மஞ்சு வாரியர்!!
வேட்டையன் படத்தின் “மனசிலாயோ” பாடல் ரிலீஸ்: ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுத்த திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தின் “மனசிலாயோ” பாடல் ரிலீஸ்
மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், ஜெயிலர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.
அதுமட்டுமின்றி இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடியுள்ளதாக படக்குழு கூறியிருந்தார். 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர்.
Also Read: மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி – என்ன காரணம் தெரியுமா? அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு!
இந்நிலையில் மனசிலாயோ பாடல் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் மலையாள பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
பாடலில் இசையமைப்பாளர் அனிருத் ரஜினியுடன் இணைந்து ஆடியுள்ளார். அதுமட்டுமின்றி மஞ்சு வாரியர் சிறப்பாக குத்து நடனம் ஆடியுள்ளார். தற்போது வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்