விஜய்யோட போட்டி போட்டா எனக்கு அவமானம்.., மீண்டும் தொடரும் காக்கா கழுகு கதை? லால் சலாம் ஆடியோ லாஞ்சில் ரஜினி பேச்சு?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பில் தற்போது உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி ,உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஏற்கனவே ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி காக்கா, கழகு என்று பேசியது விஜய்யை பற்றி தான் என்று சோசியல் மீடியாவில் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் காக்கா, கழுகு குறித்து பேசியதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, நான் சொன்ன கதையை விஜய்யுடன் சேர்த்து கம்பேர் பண்ணி சோசியல் மீடியாவில் பரப்பிவிட்டனர்.
அது தனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. என் படத்துக்கு என் படம் தான் போட்டி, அதே விஜய்யை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன், எவ்வளவு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார், அவர் படத்துக்கு அவர் தான் போட்டியே தவற நான் இல்லை. மேலும் விஜய்யை போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது, அதே போல் அவருக்கும் இருக்காது. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன், அவருக்கு அப்பாவோ நிறைய அட்வைஸ் செய்திருக்கிறேன் என்று கூறினார். இதோட இந்த காக்கா, கழுகு பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.