தற்போது ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024 முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 6ம் தேதி தேரோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ஆடி அமாவாசை திருவிழா 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆடி திருக்கல்யாண திருவிழா :
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டிற்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகின்ற 14ம் தேதி வரை 17 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 9.30 மணியளவில் கோவிலின் அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதனையடுத்து நேற்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அத்துடன் விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை அம்பாள் தங்க பல்லாக்கிலும், இரவு 8 மணிக்கு தங்க காமதேனு வாகனத்தில் வீதிஉலா வருகிறார்.
ஆடி அமாவாசை :
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மாள் தங்க சிம்ம வாகனத்திலும், 2ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. அத்துடன் 4ம் தேதியன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்கினி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்த வாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார். மேலும் அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெறும்.
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2024 – நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் – பக்தர்கள் ஆரவாரம்!!
தேரோட்டம் :
இதனை தொடர்ந்து வரும் 6ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டமும் 8ம் தேதி அன்று ராம தீர்த்தம் தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 9ம் தேதி திருக்கல்யாணமும்,14ம் தேதி சுவாமி அம்பாள் கெந்த மாதனபர்வதம் ராமர் பாதம் மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.