விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா – இப்போது எப்படி உள்ளார்?… அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!
விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை நேஷனல் க்ரஷ் என்று பாசத்துடன் அழைத்து வருகிறார்கள். கன்னடத்தில் தொடங்கிய இவர் கலைப்பயணம் தற்போது இந்திய சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா
அந்த வகையில் கோலிவுட்டில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் இருந்து தள்ளி இருக்கும் இவர் மற்ற மொழி படங்களில் பிசியாக இருந்து வருகிறார். rashmika mandanna
அதன்படி தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் புஷ்பா 2, குபேரா மற்றும் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தான் ஒரு விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” எனது அன்பான ரசிகர்களே எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நான் கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தேன்.
Also Read: வேட்டையன் படத்தின் “மனசிலாயோ” பாடல் ரிலீஸ் – துள்ளலான இசைக்கு ஆட்டம் போட்ட மஞ்சு வாரியர்!!
அதற்கு என்ன காரணம் தெரியாமல் நீங்கள் கவலையில் இருப்பீர்கள். சமீபத்தில் நான் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேன். அதில் எனக்கு காயங்கள் ஏற்பட்டதால் அதிலிருந்து மீண்டு வர மருத்துவர்களின் அறிவுரைப்படி இப்பொழுது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். உங்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. நமக்கு நாளை உண்டா என்பது தெரியாது” என்று கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்