Red Alert: கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் உறுதி: தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் உறுதி
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்:
இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 25 மற்றும் 26 போன்ற தேதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Employment News in Tamil | Click Here |
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படையும், ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தீயணைப்புத்துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை, என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களுக்கும் 2 நாட்கள் ரெட் அலெர்ட் தரப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Breaking News in Tamil:
- தமிழ்நாட்டில் நாளை மின்தடை (13.08.2025)! உடனே உங்க ஏரியா இருக்கா பாருங்க!
- மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,31,500
- திருச்சி புல்லா நாளைக்கி (12.08.2025) மின்தடை மக்களே! இப்போவே உஷார் ஆகிக்கோங்க
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை 2025! 750 காலியிடங்கள்: Eligibility Criteria, Age Limit Check Now!