இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்

   இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் சந்திரயான் 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருக்கின்றது. மேலும் சிறிய வகையான செயற்கை கோள்களை மற்ற நாடுகளில் இருந்து விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம்  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது.

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  !

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம்

குலசேகரப்பட்டிணம் எங்கிருக்கின்றது :

   தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற இடம் குலசேகரப்பட்டினம். இவ்விடம் தூத்துக்குடி மாவட்டத்தில் 48 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இஸ்ரோ சார்பில் சிறிய வகை செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்த வேண்டும் என்றால் மற்ற நாடுகளுக்கு சென்று பணம் செலுத்தி தான் விண்ணில் செலுத்த முடியும். இது போன்ற வர்த்தக செலவுகளை குறைப்பதற்காக குலசேகரப்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஏவுதளம் எப்படி இருக்க வேண்டும் :

   ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பகுதியில் காற்றின் வேகம் 30 கி.மீ க்கும் குறைவாக இருக்க வேண்டும். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , குறைந்தளவு மழை , புயல் , மின்னல் போன்றவைகள் இல்லாத இடமாக இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் அருகில் இருக்கும் மணப்பாடு கடல் பகுதி இயற்கையாகவே புயல் போன்ற சீற்றங்களுக்கு அரணாக அமைந்துள்ளது. இதனால் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதர்க்கு ஏற்ற இடமாக இருக்கின்றது.

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா ! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

குலசேகரப்பட்டினம் தேர்வு செய்ய காரணம் :

   பூமியானது தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. அப்படி சுற்றுகையில் பூமத்திய ரேகையின் நடுப்பகுதியில் அதிகபட்சமாக 1,670கி.மீ வேகமும் அங்கிருந்து தென் , வட பகுதியை நோக்கி செல்லும் போது வேகம் குறைந்து பூஜ்யமாக மாறுகின்றது. இந்த பகுதியில் இருந்து ராக்கெட் ஏவும் போது குறைந்த அளவே எரிபொருள் தேவைப்படுகின்றது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் ராக்கெட் ஏவுதளம் வட அட்சரேகையில் அமைந்துள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகை அருகில் 8.36டிகிரி வட அட்சரேகையில் அமைந்துள்ளதால் குறைந்த செலவில் அதிக வேகத்தில் அனுப்ப முடியும். 

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் எரிபொருள் :

   இஸ்ரோ விண்வெளி மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது. காவல்கிணற்றில் உள்ள  மகேந்திரகிரி இஸ்ரோ புரொபல்சன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து என்ஜின் மூலம் சாலை வழியாக சுமார் 1,000 கிலோமீட்டர் பயணம் செய்து எரிபொருள் இஸ்ரோவிற்கு செல்கின்றது. ஆனால் குலசேகரப்பட்டினம் 90 கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கின்றது. குறைந்த அளவு தூரம் என்பதால் எரிபொருட்களை விரைவாகவும் , பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடியும். குலசேகரப்பட்டினம் பகுதியில் இருந்து ராக்கெட் செலுத்தினால் 30% எரிபொருள் பயன்பாடு குறையும். 

ராக்கெட் ஏவுதளத்தின் அளவு :

   தமிழக அரசின் சார்பில் குலசேகரப்பட்டினம் பகுதியில் 2,376 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. இவைகள் கடற்கரையில் இருந்து அரைவட்ட வடிவில் இடமானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கையகப்படுத்தப்பட்ட உள்ளது. அவையாவன , மாதவன்குறிச்சி பஞ்சாயத்து கூடல்நகர் , அமராபுரம் , பள்ளக்குறிச்சி , அழகப்பபுரம் பஞ்சாயத்து பகுதிகள் இஸ்ரோ விண்வெளி நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.     

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

விண்வெளி பூங்கா அமைக்கப்படுமா :

   தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட குலசேகரப்பட்டினம் பகுதியில் ரூ. 6.24 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகின்றது. ஆயிரம் கோடி செலவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியானது நடைபெற இருக்கின்றது. கட்டிடப்பணியானது 2025 மற்றும் 2026ம் ஆண்டிற்குள் நிறைவடைய இருக்கின்றது. இந்த பகுதியின் அருகில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த விண்வெளி பூங்கா அமைக்க தமிழக அரசிடம் திட்டம் இருக்கின்றது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும். இதனால் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். SSLV போன்ற சிறிய ரக ராக்கெட்டுகள் குலசேகரப்பட்டினம் பகுதியில் இருந்து ஏவுவதர்க்கு திட்டமிடப்பட்டு உள்ளது. 

நன்மைகள் :

  1. குறைந்த செலவில் விண்கலம் அனுப்பப்படும்.

  2. வேலைவாய்ப்புகள் பெருகும்.

  3. எதிரிகளின் தாக்குதல் மற்றும் பேரிடர்களின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுதளம் இருப்பது பயனளிக்கும்.

  4. ஒரு ஏவுதளம் மட்டும் இருக்கும் போது ஒரு விண்கலத்தின் செயல்பாடுகள் மட்டுமே நடத்த முடியும். ஆனால் மற்றொரு ஏவுதளம் இருக்கும் போது விண்கலத்தின் செயல்பாடுகளில் ஏதும் தடை இருக்காது. 

  5. இலங்கை சற்று துரமாகவே இருக்கின்றது. 

விண்வெளி நிலையங்களாகும் தமிழகம் :

   இந்தியாவில் முதன் முதலில் 1960காலங்களில் விண்வெளி நிலையம் அமைப்பதற்கு தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் வாலிநோக்கம் பகுதி தேர்வானது. சில காரணங்களால் இந்த இடம் கைவிடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா பகுதி தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் இந்தியாவின் சார்பில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியா சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் வாலிநோக்கம் , நாகப்பட்டினம் பகுதிகளில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்குவதர்க்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம்

ராக்கெட் ஏவ சிறந்த இடம் :

   பூமியானது மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகின்றது. எனவே ராக்கெட் ராக்கெட் ஏவுவதர்க்கு தமிழக கடற்கரை பகுதிகளே சிறந்ததாக இருக்கின்றது. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *