சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – வழக்கு மதுரை கிளைக்கு மாற்றப்படுமா?
சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி காவல்துறை அவரை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்தது. இதனை தொடர்ந்து கோவைக்கு அழைத்து சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் சவுக்கு சங்கர் உள்பட காவல் துறையினருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதுமட்டுமின்றி அவருடன் தங்கியிருந்த நபர்களை காவல்துறை விசாரணை செய்து, அவர்கள் வந்த கரையும் சோதனை செய்தது. அப்போது அந்த காருக்குள் 2.6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே சவுக்கு சங்கர் மீதும் அவருடன் இருந்த நபர்கள் மீது கஞ்சா கடத்தல், தரக்குறைவாக பேசியது என கிட்டத்தட்ட 7 வழக்குகள் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை மேலும் ஒரு நபரை கைது செய்துள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் என்பவரின் மகன் தான் மகேந்திரன்(24). இவர் தான் சவுக்கு சங்கருக்கு அடிக்கடி கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார் என்று கூறி அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர். சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது