சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி திடீர் கைது, சினேகன் அளித்த பண மோசடி புகாரில் போலீசார் நடவடிக்கை !.

சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பா.ஐ .க கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்திரையுலகில் முன்னணி பாடலாசிரியர் ஆக இருந்து வருபவர் தான் சினேகன் அவர்கள். அவர் 2015 ம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இணையத்தில் தனது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணமோசடி செய்து வருவதாக கூறினார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!

வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் அவர் போலீசில் சென்று புகார் அளித்தார். பின்னர்இது குறித்து ஜெயலக்ஷ்மியிடம் விசாரித்த போது எனக்கு இது குறித்து எந்த வித கடிதமோ, தொலைபேசி அழைப்போ வரவில்லை. எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என்று கூறி வந்தார். பின்னர் இந்த விவாதம் 1 வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்ததை ஒட்டி தற்போது இந்த புகார் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

JOIN WHATSAPP GET LATEST UPDATES

சென்னை திருமங்கலத்தில் உள்ள ஜெயலக்ஷ்மியின் வீட்டில் இன்று போலீசார் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனை முடிவுக்கு பின்னர் ஜெயலட்சுமி தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment