தளபதியின் “ஷாஜகான்” படத்தில் நடித்த இந்த செகண்ட் ஹீரோவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத அளவுக்கு புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தொடக்கத்தில் வெற்றிக்காக போராடிய இவரது நடிப்பில் தற்போது வெளியான எல்லா படங்களும் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. இப்பொழுது பான் இந்திய அளவுக்கு வசூல் சக்கரவர்த்தியாக இருக்கிறார். இவருடன் சேர்ந்து நடித்த பல நட்சத்திரங்கள் தற்போது நல்ல நிலைமையில் இருந்துள்ளனர். ஆனால் ஒரு படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த ஒருவர் சினிமாவில் இருந்து காணாமல் போயுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் அவருக்கு நண்பராகவும், செகண்ட் ஹீரோவாகவும் நடித்த திவாகரன் கிருஷ்ணா தான். இந்த படத்தை தொடர்ந்து பிரியா வரம் வேண்டும் மற்றும் சென்னையில் ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, தனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், வாய்ப்புக்காக விஜயிடம் செல்ல நினைத்தேன்.

ஆனால் இப்போது நான் பார்த்த விஜய் இல்லை, அவர் பெரிய இடத்தில் இருக்கிறார் என்று வாய்ப்பு கேட்காமல் இருந்துவிட்டேன். ஆனால் நான் கேட்டிருக்க வேண்டும் தப்பு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது பிசினஸ் தான் செய்து வருகிறாராம். அவருடைய ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் படத்தில் நடித்தவரா இவரு? என்று ஷாக்காகி உள்ளனர்.

அரசியலில் குதித்த விஜய்.., தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி யார்? அட.., இந்த நடிகர் தானா? Vijay அளவுக்கு தாக்குபிடிப்பிப்பாரா?

Leave a Comment