சன் டிவியில் புதிதாக உருவாக போகும் சீரியல் – விஜயகாந்தின் சூப்பர் ஹிட்  பட பெயரில்!!

சன் டிவியில் புதிதாக உருவாக போகும் சீரியல்: பொதுவாக சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தொலைக்காட்சி தான். காலையில் 11 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை மக்களை டிவியில் இருந்து எழ விடாமல் தொடர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளது சன் டிவி.

ஒரு சீரியல் முடிவடைந்த பிறகு அடுத்த தொடரை ஆரம்பிக்க பல திட்டங்களை தீட்டி வருகிறது சன் தொலைக்காட்சி. அந்த வகையில் சமீபத்தில் “மணமகளே வா” என்ற தொடரின் புரொமோ வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது செவ்வந்தி தொடரை தயாரித்த 18 Reels நிறுவனம் தற்போது தயாரிக்கும் புதிய சீரியலுக்கு “சொக்கத்தங்கம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொடருக்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டுள்ளது.

Also Read: நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா? அடேங்கப்பா அடுத்த ஹீரோயின் மாதிரி இருக்காங்களே!

மேலும் இந்த தொடரில் பல முன்னணி  சின்னத்திரை நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். தற்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment