சன் டிவி சீரியல் நடிகை திடீர் மருத்துவமனையில் அனுமதி.., அடக்கடவுளே.., அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
சீரியல் என்றால் முதலில் நம் நினைவுக்கு வரும் சேனல் என்றால் சன் டிவி தான். மக்களை கவர வேண்டும் என்று பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வரும் சேனலாக சன் டிவி விளங்குகிறது. அப்படி டிஆர்பியில் டாப் 10ல் இருந்து வரும் மலர் சீரியலில் செகண்ட் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் நடிகை நிவிஷா. இவர் இதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர்க்கு மலர் என்ற சீரியல் தான் பேரும் புகழும் வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த பிஸியான நேரத்திலும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தாம் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ” கடந்த சில நாட்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறேன். இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன் . விரைவில் உங்களை சந்திப்பேன்” என்று நிவிஷா பதிவிட்டுள்ளார்.