தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்சார வாரியம் விளக்கம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா: தமிழகத்தில் வாழும் பொது மக்களுக்கு என்று அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை மானியமாக மாநில அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் சற்று கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மின் வாரியம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்று பரவி வரும் செய்திகள் ஒரு வெறும் வதந்தி மட்டுமே. தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும்  மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். எனவே மற்ற இணைப்புகளுக்கு மானியம் ரத்து செய்யப்படும். ஆனால் அந்த வீடு வாடகை விடப்பட்டிருந்தால் அவர்களுக்கான  மின்சார மானியம் வழங்கப்படும் என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. tamil nadu 100 units of free electricity rumor தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா

மக்களே ஒரு ஹேப்பி நியூஸ் – தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Leave a Comment