தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அதிரடி உத்தரவு!!

Breaking News: தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில்  உள்ள அரசு அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது தமிழக உள்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த அமுதா தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு பதிலாக தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த  ஜெ.ராதாகிருஷ்ணன் இப்பொழுது கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read: நீங்க 10க்கும் மேற்பட்ட சிம் கார்டு Use பண்றீங்களா? அப்ப சிறைக்கு போவது உறுதி?

மேலும் அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எஸ்.வளர்மதி, சமூக நலத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி உள்துறை, வருவாய், கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட 15 முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment