Home » ஆன்மீகம் » தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !

தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !

தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள்

                      தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள். விடுமுறை தினம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இருக்கும் ஒரே எண்ணம் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். குழந்தைகள் அருவி , பூங்கா , கடல் மற்றும் மலைப்பிரதேசம் போன்ற பகுதிகளுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால் முதியோர்களோ ஆன்மிகம் சார்ந்த இடங்களுக்கு சென்று இறைவனை வழிபட நினைப்பார்கள். அப்படியாக குழந்தைகளும் வயதானவர்களும் விரும்பும் தமிழகத்தில் இருக்கும் ஆன்மிகம் கலந்த சுற்றுலா தளங்கள் பற்றி காணலாம்.

spiritual tour

தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள்

   1. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 

                           2. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 

                           3. திருச்செந்தூர் முருகன் கோவில் 

                           4. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 

                           5. பழனி முருகன் கோவில் 

1. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் :

               கோவில் சிறப்புகள் :

                              மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அல்லது ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்ப்டுகின்றது. கி.பி 1190 முதல் 1216ம் ஆண்டு வரையில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவிலில் இருக்கும் மீனாட்சி அம்மன் சுயம்புவாக தோன்றியவள். அம்மனின் திருஉடல் முழுவதும் பச்சை நிற மரகத கற்களால் ஆனது. அம்மனின் கால் சற்று முன்னோக்கி இருப்பதற்கு காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு ஒடி வந்து அருள் செய்பவள் என்பதாகும். மீனாட்சி அம்மன் வலது கையில் இருக்கும் கிளி பக்தர்களின் வேண்டுதல்களை அம்மனிடம் கிளி சொல்லி உடனடியாக நிறைவேற்றுவதற்கு அம்மன் காதுகளில் பேசுவது போல் அமைந்துள்ளது. தாரகை மற்றும் அங்கயற்கண்ணி என்று வேறு பெயர்களும் மீனாட்சி அம்மனுக்கு உள்ளது. 

                கோவில் எங்குள்ளது :

                                  மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 1.4 கிலோமீட்டர் தொலைவிழும் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1.7 கிலோ மீட்டர் தொலைவிலும் மதுரை விமான நிலையத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் மதுரை வருவதற்கு பேருந்து , ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றது.

                 சுற்றுலா தலங்கள் :

                                  1. திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் பூங்கா 

                                  2. கள்ளழகர் கோவில் 

                                  3. குட்லாம்பட்டி அருவி 

                                  4. திருமலை நாயக்கர் மஹால் 

                                  5. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் 

                                  6. மதுரை அதிசயம் 

                                  7. காந்தி மண்டபம் 

                                  8. ராஜாஜி பூங்கா 

                                  9. வைகை அணை 

                                10. வாடிப்பட்டி மாதா கோவில் 

2. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் :

                   கோவில் சிறப்புகள் : 

                                    தமிழ்நாட்டின் வங்கக்கரையில் வாரணாசி கோவிலுக்கு இணையான இருக்கும் கோவில்

என்றால் அது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். இக்கோவிலில் சீதை தான் கையால் செய்த சிவலிங்கம் தான் மூலவராக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றது. மேலும் 22 அதிசய தீர்த்தங்கள் ஒவ்வரு நீராடும் போது 22 அற்புதங்களை பக்தர்களுக்கு வழங்குகின்றது. இங்கிருக்கும் அக்னி தீர்த்தக்கடலில் ஒருவர் நீராடும் போது பாவங்கள் நீங்குகின்றது. 

                   கோவில் அமைவிடம் :              

                                     தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. மதுரையில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் இருக்கின்றது. 

                    சுற்றுலா தலங்கள் :

                                      1. ஏர்வாடி தர்க்கா 

                                      2. பாம்பன் பாலம் 

                                      3. தனுசுகோடி 

                                      4. அரியமான் கடற்கரை 

                                      5. பறவைகள் சரணாலயம் 

தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் மற்றும் அதன் சிறப்புகள் !

3. திருச்செந்தூர் முருகன் கோவில் :

                  கோவில் சிறப்புகள் :

                                      குன்று இருக்கும் இடங்களில் குமரன் இருப்பர் எந்த வார்த்தை உண்டு ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகன் கடல் மட்டத்தில் இருந்து அடியில் இருப்பார். இதற்க்கு காரணம் வாழ்வில் அடி மட்டத்தில் நாம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது வாழ்க்கையில் நமக்கு முன்னேற்றம் கிடைக்கும். முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு  சென்றவர்கள் முதலில் கடலில் நீராடி பின்னர் நாழிக்கிணற்றில் நீராடும் போது அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. எந்த கோவில்களிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடி மரத்திற்கு பூஜை செய்த பின்னர் தான் முருகனுக்கு பூஜை செய்யப்படும். 

                 கோவில் எங்கிருக்கின்றது :

                                      திருச்செந்தூர் முருகன் கோவில் திருநெல்வேலி பகுதியில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும் தூத்துக்குடி பகுதியில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும் மதுரையில் இருந்து 187 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்றது. 

                  சுற்றுலா தலங்கள் :

                                      1. எட்டையபுரம் 

                                      2. மணப்பாடு புனித சிலுவை ஆலயம் 

                                      3. தூத்துக்குடி துறைமுகம் 

                                      4. குலசேகரப்பட்டினம் 

                                      5. பாஞ்சாலங்குறிச்சி 

4. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் :

                  கோவில் சிறப்புகள் :

                                      கன்னியாகுமரி கடலில் அருகில் இருக்கும் இக்கோவிலில் அம்மன் தவக்கோலத்தில் கன்னி பெண்ணாக அமர்ந்து பகவதி அம்மன் என்னும் திருப்பெயரில் வீற்றிருக்கின்றார்.  பகவதி அம்மன் அணிந்திருக்கும் வைர முக்குத்தி ஒளி கலங்கரை விளக்கம் வெளிச்சம் போன்று இருக்கும். எனவே கடலில் பயணம் செய்யபவர்களுக்கு எந்த ஒரு தடையும் இருக்க கூடாது என்பதற்க்காக கோவிலின் கிழக்கு வாசல் பூட்டப்பட்டு இருக்கும். கோவிலில் இருக்கும் பாபவிநாசன தீர்த்த கிணற்று நீர் சுவையுடன் இருக்கும். பல ஆண்டுகள் கன்னியாக இருந்து தவம் புரிந்து பாணாசுரனை வதம் செய்கின்றாள். திருமணம் ஆகாத பெண்கள் பகவதி அம்மன் கோவில் வந்து வணங்கும் போது திருமண வரன் கிடைக்கும். 21 தலைமுறைகள் செய்த பாவம் ஒருவருக்கு நீங்க வேண்டும் என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் நீராடி பகவதி அம்மனை வழிபடும் போது பாவங்கள் நீங்கும். அமாவாசை பௌர்ணமி தினத்தில் கடலில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து பகவதி அம்மனை வழிபடும் போது குழந்தை வரம் கிடைக்கும். 

                  கோவில் எங்கிருக்கின்றது :

                                       பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்து , கார் , ரயில் வசதி இருக்கின்றது. மதுரையில் இருந்து 258 கிலோமீட்டர் தொலைவிலும் தூத்துக்குடியில் இருந்து 136 கிலோ மீட்டர் தொலைவிலும் திருநெல்வேலி பகுதியில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.

                   சுற்றுலா தலங்கள் :

                                      1. விவேகானந்தர் மண்டபம் 

                                      2. காந்தி மண்டபம் 

                                      3. முட்டம் கடற்கரை 

                                      4. சங்கு துறை கடற்கரை 

                                      5. திற்பரப்பு அருவி 

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

5. பழனி முருகன் கோவில் :

spiritual tour

                     கோவில் சிறப்புகள் :

                                      போகர் சித்தர் இக்கோவிலில் இருக்கும் முருகனை பலவிதமான கெமிக்கல் பயன்படுத்து செய்தார். தினமும் இரவில் முருகனுக்கு வழிபாடு செய்து முடித்த பின் சந்தனம் பூசுவது வழக்கம். ஆனால் காலையில் வந்து சந்தனைத்தை பார்க்கும் போது பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். இதற்க்கு கரணம் முருகன் சிலையில் இருந்து வெளியேறும் வியர்வை துளிகள் தான். இந்த சந்தனத்தினை கெளபின தீர்த்தம் என்று பெயர். இவைகளில் பலவிதமான மருத்துவ குணம் நிறைந்திருக்கின்றது. முருகனின் பழனி மலைக்கு இரண்டு செல்ல யானை பாதை மற்றும் சாதன பாதைகள் இருக்கின்றது. இக்கோவிலில் பொது தரிசனத்தில் மட்டுமே முருகனை முகமுகமாய் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அங்கிருக்கும் சிவனை வழிபடும் போது வேலை தடை திருமணத்தடை நீங்கும்.  

                     கோவில் அமைவிடம் :

                                      திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் மதுரை பகுதியில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவிலும் கோயம்புத்தூர் பகுதியில் இருந்து 111 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னை பகுதியில் இருந்து 527 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கின்றது இக்கோவில். கார் , பைக் , வேன் , தனியார் மற்றும் அரசு பேருந்து மற்றும் ரயில் மூலம் பயணம் செய்து பழனி முருகன் கோவிலை அடையாலாம்.

                     சுற்றுலா தலங்கள் :

                                        1. கொடைக்கானல் 

                                        2. பசுமை பள்ளத்தாக்கு 

                                        3. மலைக்கோட்டை   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top