தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை அறிவிப்பு !தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாட்டில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.50 மற்றும் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதள வசதி இல்லாதவர்கள், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிப்பதிற்கான அரசு சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! – சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *