போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் போலீஸ், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை ஒன்றில் இதனை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழகத்தில் போலி ஆவணங்களின் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பெண்களுக்கு குட் நியூஸ் – கல்யாணத்திற்கு 1 பவுன் தங்க நாணயம் – அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்!

அத்துடன் நில அக்கிரமிப்பாளர்களிடமிருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment