தமிழக மாணவர்களே.., மொத்தம் 1.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் உதயநிதி!!!

1.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மாணவர்களுக்கு பல திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டம் தான் “நான் முதல்வன் திட்டம்”. அதாவது மாணவர்களின் மேல்படிப்பிற்க்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதன்படி பெரும்பாலான இளைஞர் தங்களின் படிப்புக்கேற்ற நல்ல வேலையை பெற்று வருகின்றனர்.

இதனால் இந்த திட்டத்தில் சேர்ந்து நல்ல வேலையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போட்டி போட்டு சேர்ந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,725 மாணவர்கள் தற்போது வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். எனவே இதுவரை 1.90 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக மாணவர்களே குட் நியூஸ்…, இந்த மாவட்டத்தில்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

Leave a Comment