மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு அடித்து ஊற்ற போகும் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள  கடலோர மாவட்டங்களுக்கு பிப்ரவரி 14 ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான உயர் காற்றழுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில்  லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நிலநடுக்கோட்டு இந்திய பெருங் கடலிலே  மெலிந்த காற்று சுழற்சி கீழடுக்கு சுழற்சியாக உள்ளது.

இதனால் காற்று சுழற்சி கடலோர மாவட்டங்களில் இருந்து உள் மாவட்டங்களுக்கு செல்கிறது.  இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  நாளை வெயில் இருந்தாலும் லேசான மழை இந்த பகுதிகளில் பெய்ய கூடும். டெல்டா பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் நாளை மழை பெய்ய கூடும். நாளை மறுநாள் பிப்ரவரி 14 ம் தேதியும் இந்த டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது

அடக்கொடுமையே.., வழியில் நின்ற ரேபிடோ பைக்.., ஓட்டுனருக்கு பயணி செய்த காரியம்.., ஷாக்கிங் புகைப்படம் வைரல்!!!

Leave a Comment