“தலைவர் 171” படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? டீசரை வெளியிட்ட படக்குழு? Titleல் எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த லோகேஷ்!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது  வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும்  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. மேலும் இப்படத்தில் ரன்வீர் சிங், நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்திற்கு “கூலி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

மக்களே உஷார் – கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment