தனுஷின் “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தில் நடித்த சாமி நாதனை நியாபகம் இருக்கா? ஆளே அடையாள தெரியாம வளர்ந்துட்டாரே?
தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “கேப்டன் மில்லர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, வசூலில் சக்க போடு போட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் தனுஷின் கெரியரில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் என்றால் அது திருவிளையாடல் ஆரம்பம் தான். இப்படத்தில் அவருடன் இணைந்து ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த படத்தில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது தனுஷ்க்கு தம்பியாக நடித்த சாமிநாதன் கதாபாத்திரம் தான். அந்த கேரக்டரில் நடித்த நடிகர் தான் கிரண். சுட்டிப் பையனாக நடித்து அசத்திய அவரின் டயலாக்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது அவருடைய ரீசன்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பையனாக மாறி விட்டாரா என்று ஆச்சரியத்தில் இருந்து வருகின்றனர்.