நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி  – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி: நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கரசுப்பு. கூலி வேலை பார்க்கும் அவருடைய சொத்து பத்தில் பங்காளிகள் பிரித்து தரவில்லை என்று கூறி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இருப்பினும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் இருந்து வந்த நிலையில், சங்கரசுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்து சென்றுள்ளார். ஆனால் அங்கேயும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், மனவேதனை அடைந்த சங்கரசுப்பு கடந்த மே 13ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் அலறல் சத்தத்துடன் ஓடி வந்தார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் அவருக்கு தொப்புள் மற்றும் வயிற்றுக்கு கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீக்காயம் 90% அதிகரித்தது. இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கரசுப்பு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் நெல்லை மாவட்ட கலெக்டர் ஆபிஸில் கடந்த 2017ம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி – tirunelveli collector office farmer died in fire 2024

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(17.05.2024) – மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment