திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் – பக்தர்கள் அதிர்ச்சி !

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் அடைந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தத்தை சரிசெய்யும் பணியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இன்று விஸ்வசேனாதிபதி வீதியுலா, அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்கு ஏழுமலையானின் சேனாபதியான விஸ்வசேனாதிபதி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வருகிறார். tirupati golden flagstaff damaged during annual brahmotsavam celebration

பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நாளை மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரம்மோற்சவ கொடி விஸ்வசேனாதிபதி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோருடன் மாடவீதியில் வீதியுலா நிறைவடைந்த பிறகு பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும்.

அந்த வகையில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார்.

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு – கடிதம் மூலம் அறிவிப்பு !

இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தின் வளையம் திடீரென உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவ்வாறு பிரம்மோற்சவத்திற்காக கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கயிறை பொருத்தும் பணியின்போது வளையம் உடைந்துள்ளது. அந்த வகையில் சேதத்தை சரிசெய்யும் பணியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment