திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு ஒரு நபருக்கு தலா 2 லட்டுகள் வழங்குவது வழக்கம்.

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்

அதன்படி நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த லட்டை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தான் தயாரித்து வருகின்றனர். மேலும் கூடுதல் லட்டு வேண்டும் என்று கேட்கும் பக்தர்கள் கவுன்டரில் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். aadhaar card

இந்த முறை தான் இப்பொழுது வரை திருப்பதியில் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. tirupati tirumala temple laddu

Also Read: உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர் – சோகத்தில் ரசிகர்கள்!

அதாவது திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு ஒரு நபருக்கு இனி ஒரு லட்டு தான் இலவசமாக கொடுக்கப்படும். அதற்கு மேல் லட்டு கேட்கும் பக்தர்கள் கவுண்டரில் 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம். அதற்கு முக்கியமாக வாங்கும் பக்தர்களின் ஆதார் கார்டு முக்கியம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. devasthanam

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Comment