கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் – மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப், இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்ரகாஷ். விவசாயியான இவர் கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றுள்ளார்.

மேலும் அந்த ஜீப்பில் அவர்களுடன் அவர் நண்பர் காளிமுத்து என்பவரும் உடன் வந்துள்ளார். இதனிடையில் ஜெயப்ரகாஷ் தனது மனைவியை மருத்துவமனையில் இறக்கி விட்டு தனது நண்பருடன் கொடைக்கானல் ஏரிச்சாலையில் நேற்று மதியம் ஜீப்பில் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஏரிச்சாலையில் உள்ள பெரிகிராஸ் பகுதியில் வளைவில் ஜீப் திரும்பியது. அந்த சமயம் எதிரே மாரியம்மாள் என்ற பெண் மொபெட்டில் வந்துள்ளார்.

அதன் பின்னர் திடீரென அந்த மொபெட் மீது ஜீப் மோதியதில் ஜீப் தறிகெட்டு தாறுமாறாக ஓடியுள்ளது.

இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அந்த ஜீப் அருகிலிருந்த நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்துள்ளது இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்த போது ஜீப்பின் பெரும்பாலான பகுதி ஏரிக்குள் மூழ்கியதும், மேலும் அந்த ஜீப்பில் 2 பேர் சிக்கிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஏரிக்குள் பாய்ந்த வேகத்தில் ஜீப்பின் பின்பக்க கதவு திறந்துள்ளது அதன் வழியாக தப்பிய ஜெயப்ரகாஷ் என்பவர் நீச்சல் அடித்து உயிர் தப்பியுள்ளார். அதன் பின்னர் காளிமுத்து என்னும் நபர் ஜீப்பின் பக்கவாட்டு கதவை திறந்து ஜீப்பின் மேல் ஏறி நின்றுள்ளார்.

17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!

இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் காளிமுத்துவை காப்பாற்றினர். அத்துடன் மொபெட்டில் வந்த மாரியம்மாளுக்கு விபத்தினால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் காயமடைந்தவர்களுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment