ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேர் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் இவர்களில் விசாரணையின் போது தப்பி ஓட முயன்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பணம் எதற்காக போடப்பட்டது, யார் சொல்லி டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து பெண் ஒருவருடன் போலீசார் விசாரணை.

மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை பெண் வழக்கறிஞரிடம் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாம்பஜாரை சேர்ந்த பிரபல தாதாவின் மனைவியான பெண் வழக்கறிஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை, மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஆற்க்காடு சுரேசின் மைத்துனர் அருள் என்பவருடன் பெண் வக்கீலுக்கு தொடர்பா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment