ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு.

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கப்பட்டு நடத்திட அரசாணை பெறப்பட்டு, தற்போது கலந்தாய்விற்கான உத்தேச காலஅட்டவணை செயல்முறைகளின் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது நடப்பு கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு, முன்பு இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து வருவதால் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

அந்த வகையில் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment