தமிழகத்தில் செப் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் செப் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுப்பு வழங்குவது வழக்கம்.

தமிழகத்தில் செப் 17ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

அந்த வகையில் வருகிற செப்டம்பர் 17 -ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாட இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

எனவே அந்த நல்ல நாளில் மது கடைகள் இயங்காது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இஸ்லாமியர்களின் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான்  மிலாடி நபி.

Also Read: ஆந்திராவில் லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

அந்த பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த  டாஸ்மாக்‍  கூடங்களில் (17.09.2024) அன்று சரக்கு பாட்டில்கள் விற்பனை செய்ய கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். மேலும் அரசாங்க உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Comment