தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Breaking News: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின்  அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது சென்னை வானிலை மையம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அதாவது, ” தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை தொடர்ந்து நாளை தென்காசி, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. weather report news in tamil

Also Read: வாகன ஓட்டிகளே குட் நியூஸ் – விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறைய போகுது!!

மேலும் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Comment