சினிமாவுக்காக தங்களுடைய அழகிய பெயரை மாற்றிய டாப் நடிகைகள் .., யாரெல்லாம் மாற்றி இருக்காங்க பாருங்க!!
டாப் நடிகைகள்
பொதுவாக சினிமாவுக்குள் புதிதாக நுழையும் நட்சத்திரங்கள் முதலில் மாற்றுவது அவர்களுடைய பெயராக தான் இருக்கும். சிலர் பெயரை மாற்றினால் நல்ல நிலைமைக்கு வரலாம் எனவும், சிலர் ஏற்கனவே அந்த பெயரில் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்றும் தான் தங்களுடைய பெயரை மாற்றி கொள்கிறார்கள். அப்படி ஒரிஜினல் பெயரை மாற்றி தற்போது சினிமாவில் உச்சத்தை பெற்ற நடிகைகள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
நயன்தாரா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாராவின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா?. அவருடைய நிஜ பெயர் டயானா மரியம் குரியன் தான். சினிமாவுக்காக நயன்தாரா என மாற்றியுள்ளார்.
அனுஷ்கா ஷெட்டி:
வரலாற்று கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவருடைய உண்மையான பெயர் தான் ஸ்வீட்டி ஷெட்டி.
ரம்பா:
தொடையழகி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை ரம்பா. அவருடைய ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமியாம்.
சினேகா
புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. அவரின் உண்மையான பெயர் என்னவென்றால் சுஹாசினி தான், சினிமாவுக்காக மாற்றியுள்ளார்.
பாவனா
ஏகன், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை பாவனாவின் இயற்பெயர் கார்த்திகா மேனன்.
அஞ்சலி
ஒரு காலத்தில் செம பிஸியான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அஞ்சலி. அவருடைய நிஜ பெயர் பாலதிரிபுரசுந்தரியாம். சினிமாவுக்காக அஞ்சலி பெயரை மாற்றியுள்ளார்.
பெயர் மாற்றிய மற்றும் பல நடிகைகள் லிஸ்ட்:
- சமந்தா – ரூத் பிரபு
- பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர்
- ஓவியா – ஹெல்லன் நெல்சன்
- ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா
- நதியா – ஜரினா மொய்டு
- பானு பிரியா – மங்கா பாமா
- ரேவதி – ஆஷா
- நிக்கி கல்ராணி – நிகிதா
- சிம்ரன் – ரிஷி பாலா நவல்
- நக்மா – நந்திதா
- இனியா – ஸ்ருதி
- சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி
- மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப்
- மியா ஜார்ஜ்- ஜிமி ஜார்ஜ்
- குஷ்பு – நகத் கான்
- கோபிகா – கர்லி ஆண்டோ
- காதல் சந்தியா – ரேவதி அஜித்
- நவ்யா நாயர்- தான்யா வீணா
- அனன்யா- ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர்
- நந்திதா – ஸ்வேதா