ஐக்கிய அமீரகத்தில் நேற்று கனமழை – இன்று சர்வதேச விமான சேவைகள் ரத்து – வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஐக்கிய அமீரகத்தில் நேற்று கனமழை – இன்று சர்வதேச விமான சேவைகள் ரத்து:துபாயில் கடந்த மாதம் ஏற்பட்ட புயலின் காரணமாக பலத்த கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. இதனால் துபாயில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று கனமழை பெய்தது.

மேலும் துபையில் பெய்த மழையை விட  இது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் மோசமான வானிலை காரணமாக இன்று பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் இன்று துபாய் விமான நிலையத்திலிருந்து வரும் அல்லது புறப்படும் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம் என்று அமீரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லி பள்ளியில் பயங்கரம் – முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி – பதைபதைக்கும் வீடியோ!

Leave a Comment