இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்!

உயர்கல்வி துறையில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதாக குறித்து பல்வேறு மாற்றங்கள் வர இருப்பதாக வரைவு அறிக்கையை குறித்து பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உயர் கல்வியினை மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உயர்கல்வி துறையில் வர இருக்கும் பல்வேறு மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி வருடத்திற்கு 2 முறை ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். அதே போல் எந்த ஆண்டிலும் விலகி கொள்ளலாம். மேலும் படிக்கும் போதே விலகி மற்ற படிப்புகளில் சேர்ந்து ‘multiple entry and exit’ முறை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் 2 இளங்கலை(UG) அல்லது 2 முதுகலை(PG) பட்டப்படிப்பு படிக்க முடியும். அதுமட்டுமின்றி, 12ஆம் வகுப்பில் எந்த குரூப் எடுத்து படித்திருந்தாலும், அவர்கள் விரும்பிய இளங்கலை அல்லது முதுகலை படிப்பை தேர்வு செய்து படிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும், படித்த ஆண்டுகளுக்கு ஏற்ப சான்றிதழ் படிப்பாகவோ, பட்டயமாகவோ, பட்டமாகவோ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

IND vs AUS : இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய Playing 11 அணி அறிவிப்பு!
தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் – டோக்கன் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு – நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் நாளை (06.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு –  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!

Leave a Comment