பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் – புட்டினை மோசமான குற்றவாளி என ஜெலன்ஸ்கி பதிவு !

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புடின் மோசமான குற்றவாளி என தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்று பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று மாஸ்கோ சென்ற அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மற்றும் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரஷ்யாவின் மூத்த துணை பிரதமர் மாண்டூரோவ் பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

இதனையடுத்து நோவோ ஓகாரியோவோவில் உள்ள ரஷிய அதிபர் புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவரை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்த சந்திப்பை உலக நாடுகள் உண்ணிப்பாக கவனித்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் புடின் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு, பெரிய ஏமாற்றம் மற்றும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு பேரழிவு என விமர்சித்துள்ளார்.

இதனையடுத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடிப்பதைப் பார்ப்பது ஒரு பெரிய ஏமாற்றம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் கிய்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 41 பேர் பலியாகியுள்ளனர்.

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 27 பேர் பலி!!

அந்த வகையில் உலக நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷ் அதிபர் புடினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்

Leave a Comment