ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் !

தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2014 ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். மேலும் இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றும் போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து வலியுறுத்தி பேசினார். அத்துடன் சட்ட கமிஷனும் இது குறித்த அறிக்கைகளை விரைவில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ரத்து – அடக்கடவுளே யாருக்கெல்லாம் தெரியுமா?

மேலும் இது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். மேலும் இது சட்ட வடிவம் பெரும் போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment