உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பரிதாப பலி!
உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் என்ற மாவட்டத்திற்கு இன்று காலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து
அந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ட்ரைவர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?
மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராம்நகரில் உள்ள மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்