கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலுகமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

  கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு . தமிழ் திரையுலகில் நகைசுவை நடிகராக அறிமுகம் ஆன வடிவேலு தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குணசித்திர நடிகர் என்ற புகழப்பட்டார். தற்போது மாமன்னன் திரைப்படத்திலும் வடிவேலு சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்து உள்ளார். இப்பொழுது மீண்டும் கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

காமெடியனாக அறிமுகம் :

  நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ” என் ராசாவின் மனசிலே ” திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமானார். இவர் அறிமுகம் ஆன இதே திரைப்படத்தில் “போடா போடா புண்ணாக்கு ” என்ற பாடலையும் பாடி சிறந்த பாடகராகவும் அறிமுகமானார். தற்போது வரையில் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ” வைகை புயல் ” மக்களால் அழைக்கப்படுகின்றார்.

குணசித்திர நடிகர் :

  சிறந்த நகைசுவை நடிகர் என்று பாராட்டப் பெற்ற வடிவேலு தேவர் மகன் திரைப்படத்தில் ” இசக்கி ” என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குணசித்திர நடிகரானார். திரையுலகில் குணசித்திர நடிகராக வடிவேலு இருப்பதற்கு பெரிதும் காரணமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் தான் தேவர் மகன் திரைப்படத்தினை இயக்கி தயாரித்தும் இருந்தார். இவர் வடிவேலுவிற்கு கொடுத்த வாய்ப்பின் காரணமாகத் தான் தற்போது வரையில் வடிவேலு குணசித்திர நடிகர் என்று கொண்டாடப்படுகின்றார். 

 பரிவர்த்தனை மூவி எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ !

இசக்கி கதாப்பாத்திம் :

  வடிவேலு தேவர்மகன் திரைப்படத்திற்கு பின் பல திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் நகைசுவை நடிகராகவே கொண்டாடப்பட்டார். ஆனால் பொற்க்காலம் , இம்சை அரசன் 23ம் புலிக்கேசி , தென்னாலி ராமன் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தேவர் மகன் திரைப்படத்தில் கிடைத்த கதாப்பாத்திரம் போல் பல ஆண்டுகளாய் அமையவில்லை. 

மாமன்னனாய் வடிவேலு :

  சில ஆண்டுகளுக்கு பின் வடிவேலு தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருடன் உதயநிதி ஸ்டாலின் , கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் போன்ற திரைபிரபலங்கள் நடித்து இருந்தனர். பல தேவர் மகன் திரைப்படத்திற்கு பின் முழுமையான குணசித்திர நடிகராக வடிவேலு இந்த படத்தில் நடித்திருந்தார். நகைசுவை நடிகர் என்பதை மறந்து ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் வடிவேலு. 

கமல் தயாரிக்கும் திரைப்படம் :

  நடிகர் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னரே ” தலைவன் இருக்கின்றான் ” என்னும் திரைப்படத்தினை இயக்க இருந்தார். இந்த திரைப்படத்தில் வடிவேலுவை நகைசுவை நடிகராக காட்டாமல் குணசித்திர நடிகர் கதாப்பாத்திரம் கொண்டு கதை எழுதி இருந்தார். அதாவது தேவர் மகன் இசக்கி கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும் இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரம். ஆனால் சில பல காரணங்களால் இந்த திரைப்படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

  மாமன்னன் திரைப்படத்தினை பார்த்த பின் ஹீரோவாக வைத்து திரைப்படத்தினை தயாரிக்க இருக்கின்றார். இந்த திரைப்படமானது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கின்றது. கமலின் ” ராஜ்கமல் பிலிம்ஸ் ” தயாரிப்பு நிறுவனம் தான் திரைப்படத்தினை தயாரிக்க இருக்கின்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

படத்தின் கதை :

  கமல் வடிவேலுவை வைத்து தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படமானது ‘ இம்சை அரசன் 23ம் புலிக்கேசி ‘  திரைப்படம் போல் இருக்கும். அதாவது முழுமையான நகைசுவை திரைப்படமாக இருக்கும். தற்போது இருக்கும் அரசியலை நகைசுவை விதத்தில் கலந்து மக்களுக்கு சொல்லும் திரைப்படமாக இருக்கும். 

படக்குழு யார் :

  வடிவேலு ஹீரோவாக நடிக்க இருக்கின்றார் என்றும் கமல்ஹாசன் திரைப்படத்தினை தயாரிக்க இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் திரைப்படத்தினை யார் இயக்குகின்றார் , இசையமைப்பாளர் யார் மற்றும் உடன் நடிக்க இருக்கும் நடிகர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை.  

கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

   மாமன்னன் திரைப்படத்திற்கு பின் வடிவேலுவிற்கு புதிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் அவைகள் குணசித்திர கதாப்பாத்திரம் அல்லது ஹீரோ கதாப்பாத்திரம் போல் கிடைக்கின்றது. இதனால் மீண்டும் பழைய நகைசுவை நடிகர் வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *