குடித்துவிட்டு ஆட்டம் போட்ட முரளி வடிவேலு – நேரில் சென்று மிரட்டிய கேப்டன் விஜயகாந்த்!
குடித்துவிட்டு ஆட்டம் போட்ட முரளி வடிவேலு: தமிழ் சினிமாவில் அனைவரையும் நடிப்பால் கவர்ந்த ஒரு நடிகர் தான் முரளி. இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இவர் மண்ணை மட்டும் மறைந்தாலும் அவர் படத்தின் மூலம் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறார். மேலும் இவரும் வடிவேலும் சேர்ந்து நடித்த படங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது.
குடித்துவிட்டு ஆட்டம் போட்ட முரளி வடிவேலு
குறிப்பாக அவர்கள் சேர்ந்து நடித்த சுந்தரா டிராவல்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இயக்குநர் தாஹா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு முரளி, வடிவேலு, வினுசக்கரவர்த்தி ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்தினை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் தங்கராஜ் தயாரித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான விஷயத்தை கூறியுள்ளார்.
அதாவது, முரளியும் வடிவேலும் குடித்துவிட்டு சரியாக ஷூட்டிங்கிற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் படத்தை கை விடும் அளவுக்கு சென்ற நிலையில் நடிகர் சங்கத்தின் தலைவர் விஜய் காந்தை சந்தித்து அதை பற்றி கூறியுள்ளார்.
பிக்பாஸ் விக்ரமனுக்கு நடந்த பிரமாண்ட திருமணம் – கலந்து கொண்ட BB பிரபலங்கள்!
அவர் கூறியதை கேட்டு ஆத்திரம் அடைந்த கேப்டன் விஜயகாந்த், படப்பிடிப்புத் தளத்திற்கு நேரடியாக சென்று முரளி மற்றும் வடிவேலு என இருவரையும் கடுமையாக திட்டியுள்ளார்.
ஒழுங்கா படத்தை நடித்து முடிக்கணும், இல்லனா தொலைச்சுருவேன் என்று மிரட்டியுள்ளார்.
அதன்பிறகே இருவரும் எந்த தடையும் இன்றி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படத்தை முடித்து கொடுத்தனர் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா?
இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?