வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் – கல்வி அதிகாரி விசாரணை !

தமிழ்நாடு பெண்கள் வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தற்போது பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் தற்போது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சு என்ற பெயரில் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை கருத்துக்களை பள்ளி மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் மகாவிஷ்ணு என்பவரை கைது செய்யப்பட்டு,

தற்போது விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் நடந்துள்ளது.

சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளில் ஒன்று சேர்ந்து சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Comment