வெற்றி துரைசாமி உடலை கண்டிபிடித்த மீட்பு பணியாளர்.., சொன்னதை செய்து காட்டிய சைதை துரைசாமி!!

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமி கடந்த வாரம்  இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது, எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் நிலைதடுமாறி சட்லஜ் நதியில் மூழ்கியது.  இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் நண்பர் கோபிநாத் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி மட்டும்  எங்கே என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.  இதனை தொடர்ந்து  மீட்பு பணியினர் கிட்டத்தட்ட 8 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், நேற்று நதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இவர் உடல் இறுதி அஞ்சலிக்காக  சென்னை சிஐடி நகரில் உள்ள  சைதை துரைசாமியின்  இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் வைக்கப்படவுள்ளது. இதையடுத்து மாலை 6  மணி அளவில் கண்ணம்மா பேட்டை மயான பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறதாம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி தருவதாக  சைதை துரைசாமியின் குடும்பத்தினர் தெரிவித்தபடி, வெற்றி துரைசாமியின் உடலை கண்டுபிடித்த மீட்பு பணியாளருக்கு ஒரு கோடி ரூபாயை சைதை துரைசாமி வழங்கியுள்ளார். 

தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., இத யாரும் எதிர்பார்க்கல.., அனல் பறக்கும் TVK அரசியல் களம்!!

Leave a Comment