விக்னேஷ் சிவனின் “LIC” திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா? – வெளியான ஷாக்கிங் தகவல்!
இயக்குனர் விக்னேஷ் சிவனின் “LIC” திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா: தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர் தான் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த இரண்டு படங்களும் அவரது கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கியமான ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவனின் “LIC” திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, LIC படத்தை தயாரிப்பு நிறுவனம் டிராப் செய்து விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது.
Also Read: “கோட்” மூவியில் கேப்டன் விஜயகாந்தை காட்ட கூடாது – பிரேமலதா அதிர்ச்சி பேட்டி!!
இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த லலித் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னொரு பக்கம், LIC திரைப்படம் ட்ராப் ஆகவில்லை என்றும் கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கிறார்கள் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதில் எது உண்மை என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா