ஜீசஸ் சர்ச்சை விவகாரம்.., “நான் தவறாக எதுவும் சொல்லவில்லை” – விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி!!!
ஜீசஸ் சர்ச்சை விவகாரம்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்து வரும் நிலையில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. இதில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த ப்ரோமஷன் நிகழ்ச்சியில், மிருணாளினி ரவி கையில் மது பற்றி விஜய் ஆண்டனி கேட்ட போது, ” மது என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் ஆண், பெண் என்ற வேறுபாடு என்ன?, அதற்காக குடியை நான் ஆதரிக்கவில்லை, அதை சரி என்றும் கூறவில்லை. ஆனால் மது குடிப்பது தப்பு என்றால் அது இரண்டு பேருக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி ஜீசஸ் கூட குடித்துள்ளார் என பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து தற்போது விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், “அன்பார்ந்த கிறிஸ்தவர்களே எல்லாரும் வணக்கம். நான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜீசஸ் குடித்திருப்பார் என்று கூறியிருந்தேன்.
திராட்சை ரசம் என்ற மதுபானம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது. மேலும் ஜீசஸ் பயன்படுத்தினார் என்று உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.