விஜய்யுடன் மோதும் அடுத்த தளபதி – ரேஸில் இருந்து பின்வாங்கிய அஜித் சூர்யா – யாருக்கு வெற்றி?

தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்துக்கு போட்டியாக பிரபல நடிகர் திரைப்படம் போட்டி போட போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் இப்பொழுது கோட் படத்தில் நடித்து வருகிறார். சென்னை 60028, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படங்களை  கொடுத்த வெங்கட் பிரபு படைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சாங்  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14) வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் விஜய்க்கு போட்டியாக மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ரேஸில் சூர்யா, அஜித் படங்கள் களமிறங்கவில்லை. ஆனால் தற்போது பிரபல நடிகர் ஒருவர் தளபதியுடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த தளபதி என்று தற்போது ரசிகர்கள் அழைக்கப்படும் நடிகரான சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் அமரன். இந்த திரைப்படம் தான் தான் கோட் படத்துடன் மோத இருக்கிறது. ஆகையால் இந்த ரேசில் தளபதியா அல்லது சிவகார்த்திகேயனா என்பது படம் வெளியாகி வசூல் பொறுத்து இருந்து பார்க்கலாம். 

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் நூதன முறையில் ஒட்டுக்கேட்பு – தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்த அதிமுக!!

Leave a Comment