GOAT update: விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு? படு கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங்கை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் சேர்ந்து யுவன் சங்கர் ராஜா பயணிக்கிறார். இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா நாட்டில் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. மேலும் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இனி இந்த விஷயம் நடக்காது? வருகிறது புதிய மாற்றம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!

Leave a Comment