ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

தலைவர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் மீது காவல்துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.

தளபதி விஜய்

நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், நேற்று முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், ‘தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் பொது செயலாளர் புஷ்ஷி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் தற்போது வரை கட்சியின் நிறம், சின்னம் போன்ற எதுவும் தலைவர் விஜய் வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களில் இருக்கும் த.வெ.க உறுப்பினர்கள் நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சியை  நடத்தியுள்ளனர்.

பொதுவாக எந்த பகுதியில் கொடியேற்றம் செய்கிறார்களோ அங்கு இருக்கும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும். ஆனால்  த.வெ.க உறுப்பினர்கள் உரிமம் பெறாமல் கொடி கம்பம் வைத்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை கொடிக் கம்பத்தை அகற்றி,  கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதாக சலசலப்பு ஏற்பட்டது.

பொதுத்தேர்வு மாணவர்களே ரெடியா.., இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

Leave a Comment